“தினசரி கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 5,000- க்கும் மேல் பதிவாகலாம்”- நிதித்துறை அமைச்சர் எச்சரிக்கை!

lawrence wong says about foreign workers
PHOTO: MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION

சிங்கப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சிங்கப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்; அவசரத் தேவைக்காக வெளியே செல்லும் பட்சத்தில் முகக்கவசம் அணிதல்; சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்; கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

‘அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… சிக்கிய போதைப்பொருட்கள்’- நான்கு பேர் கைது!

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்த நிதித்துறை அமைச்சர் லாரன்ஸ் வோங், “கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை வரும் நாட்களில் 5,000 (அல்லது) அதற்கும் மேல் பதிவாகலாம். அவர்களில் சுமார் 500 பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறக்கூடிய சூழல் உருவாகும்; அவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சைக் குறைந்தது ஒரு வாரத்திற்கு தேவைப்படும். அத்தகைய சூழலை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரில் சுமார் 0.2% பேருக்கு தீவிர சிகிச்சைத் தேவைப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையைவிட 50 மடங்கு அதிகமானோரை அணுக்கமாய்க் கண்காணிக்க வேண்டியிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தற்போது, சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 82%- ஐ கடந்துள்ளது. மேலும், புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்படுபவர்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மட்டுமே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்துக்கு கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பியுள்ள சிங்கப்பூர்!

அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது சுகாதாரத்துறை அமைச்சகம். வரும் நாட்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.