சிங்கப்பூரில் உணவகங்களில் வாடிக்கையாளர்களைக் திருப்திபடுத்துவதில் சிரமம்.!

Pic: Greyloft

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது, அதேசமயம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது போன்ற இக்கட்டான சூழலை சில உணவகங்கள் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூன்று உணவகங்கள் விதிமுறைகளை மீறிய குற்றத்தைப் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 183 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

பிரிட்டிஷ் இந்தியன் கறி ஹட் என்ற உணவகத்தின் வாசலில் கூட்டம் கூடி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஜூன் மாதம் 19ஆம் தேதி பத்து நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. அதேபோல், சென்றவார இறுதியில் மூன்ஸ்டோன் பார் மற்றும் கோழி இறைச்சிக்கு பெயர் பெற்ற சிக்கோ லோக்கோ ஆகிய வர்த்தகங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் பத்து நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

இவை வாடிக்கையாளர்களுக்கு இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்த அனுமதி அளித்து விதிமுறைகளை மீறியதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விரு வர்த்தகங்களும் தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரீசிலனை செய்யுமாறு விடுத்த முறையீடு நிராகரிக்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்துவது கூடாது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் இடையே ஒன்றுகூடல் கூடாது போன்ற விதிமுறைகளைத் தாங்கள் அறிந்திருந்தபோதிலும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் எனில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் தேவை என உணவு, பானக் கடைகள் கூறியுள்ளன.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் “இந்தியர்களுக்கான இடம் எப்போதும் பாதுகாக்கப்படும்” அமைச்சர் சண்முகம்.!