சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை..!

சிங்கப்பூரின் இரண்டாம் கட்டம் தொடங்க உள்ள நிலையில், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் (FDWs) தங்கள் ஓய்வு நாட்களில் பெரிய குழுக்களாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) புதன்கிழமை (ஜூன் 17) தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிங்கப்பூரின் முதல் கட்டத்தின் போது இதுபோன்ற ஊழியர்கள் தங்களது ஓய்வு நாட்களில் வீட்டில் தங்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலக போட்டித்திறன் தரநிலை குறியீட்டு பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்..!

இந்த ஆலோசனை திரும்பப் பெறும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தங்கள் ஓய்வு நாட்களை வெளியில் செலவிட விரும்பும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், தங்கள் முதலாளிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று MOM தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் வார நாட்களில் அவ்வாறு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

பணிப்பெண்கள் தங்கள் செல்லும் இடத்தை அவர்களின் முதலாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், TraceTogether செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் ஊக்குவித்துள்ளது.

ஓய்வு நாளில் வெளியே செல்லும் போது, ​​வெளிநாட்டு பணிப்பெண்கள் பாதுகாப்பான இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுவதாக MOM தெரிவித்துள்ளது.

வெளியே செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை:
  • முகக் கவசம் அணிந்துகொண்டு ஒருவருக்கொருவர் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவேண்டும்
  • நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைக் கவனிக்க வேண்டும்.
  • உணவு, பானங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களைப் மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்
  • வெளியில் செலவிடும் நேரத்தை குறைத்தல் மற்றும் சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல்
  • மால்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்குதல்
  • ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுக் கூடக்கூடாது

சிட்டி பிளாசா, லக்கி பிளாசா மற்றும் Peninsula பிளாசா போன்ற நெரிசலான இடங்களை வருகைதரவோ அல்லது பொது இடங்களில் சுற்றி திரியாவோ கூடாது என்றும் அமைச்சகம் பணிப்பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த பட்டியலில் புதிதாக 2 இடங்கள் சேர்ப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      https://twitter.com/tamilmicsetsg

??Telegram  https://t.me/tamilmicsetsg

?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg