சிங்கப்பூரில் 3 தங்கும் விடுதியில் தொற்றுநோய் குழுமம் – பாதிப்பு நிலவரம்

Google Maps

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 1000ஐ தாண்டி பதிவாகி வருகிறது, அதே போல இறப்புகளும் 2, 3 என பதிவாகிறது.

ப்ளூ ஸ்டார்ஸ் தங்கும் விடுதியில் தற்போதுள்ள கிருமித்தொற்று குழுமத்தில் மேலும் 18 பேருக்கு புதிதாக பாதிப்பு பதிவாகியுள்ளது. அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 381ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.. மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ள விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

குடியிருப்பாளர்களிடையே உள்-விடுதி பரவல் ஏற்பட்டதாகவும், புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் தொற்று, விடுதிக்கு அப்பால் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே போல, உட்லேண்ட்ஸ் தங்கும் விடுதியில் மேலும் 12 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தெம்பனீஸ் தங்கும் விடுதியிலும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று குழுமம்:

sep-27-moh-large-clusters

துவாஸ் விபத்து: “இறந்த மாரிமுத்துவுக்கும் எனக்கும் இடையிலான உறவு மிக சிறந்த ஒன்று ” – கண்ணீர் விட்ட முதலாளி