சிங்கப்பூரில் கிட்டத்தட்ட S$500,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – 6 பேர் கைது!

drugs seized CNB operation
(Photo: CNB)

சமீபத்தில் போதைப்பொருள் தொடர்பாக இரண்டு நாள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 28 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட 3 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் அடங்குவர்.

“வெளிநாட்டு ஊழியர்களின் நம்பிக்கை, பொறுமை மற்றும் ஆதரவுக்கு நன்றி” – பிரதமர் லீ

மேலும், கிட்டத்தட்ட S$500,000 மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) இன்று (டிசம்பர் 18) தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைமருந்துகளில் 4 கிலோவுக்கு மேல் கஞ்சா, 466 கிராம் ஹெராயின், கிட்டத்தட்ட 1 கிலோ ஐஸ், உள்ளிட்டவை இருந்ததாக CNB தெரிவித்துள்ளது.

ஆயுதங்களும், மேலும் பல்வேறு போதைப்பொருள் தயாரிப்புக்கான பொருள்களும் இதில் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் அனைவரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டுக்கான இந்தியா-சிங்கப்பூர் விமானச் சேவை: முன்பதிவு துவக்கம்!

மேலும் 4 இடங்களுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள SIA!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…