சிங்கப்பூரில் 3,200க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் பறிமுதல் – மூவர் கைது

duty-unpaid cigarettes seized
GOV.SG

லோயாங் டிரைவிற்கு அருகிலுள்ள தொழிற்பேட்டையில், கடந்த செவ்வாயன்று (டிசம்பர் 28) 3,200க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டு அட்டைப்பெட்டிகளை சிங்கப்பூர் சுங்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்த நடவடிக்கையின் போது 16 வயது சிறுவனும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை இன்று (டிசம்பர் 31) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Breaking: ஜன. 7, 2022 முதல், VTL அல்லாத பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் சிங்கப்பூர்!

அவர்களில் இருவர் மீது நேற்று டிசம்பர் 30 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, மற்ற இருவருக்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.

சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரி செலுத்தப்படாத 3,232 சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் மூலம் சுமார் S$298,000 வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

இந்த டிசம்பர் மாதம், கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தல் பொருட்களை வாங்குபவர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அவர்கள் சிக்கினர்.

இந்த ஆண்டு மட்டும், சுமார் 463,000 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

VTL சேவை மீண்டும் தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா…?