தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் இலவசமாக பயணிக்க தயாரா? – ஒரு நாள் (நவ.11) சலுகை

Commuter climbed onto tracks
Pic: File/Today

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் (TEL) மூன்றாவது கட்டத்தில் பயணிகள் இலவசமாகப் பயணிக்க முடியும்.

நாளை வெள்ளிக்கிழமை (நவ.11) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பயணிகள் அந்த இலவச பயணத்தை அனுபவிக்கலாம்.

ஆனால், 11 புதிய நிலையங்களுக்கு இடையில் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் சொல்லப்பட்டுள்ளது.

தாயை கீழே தள்ளி உதைத்து, துடைப்ப கட்டையால் தாக்கிய மகன் – சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு

TEL ரயில் பாதையின் மூன்றாம் கட்டம், வரும் நவம்பர் 13 அன்று பயணிகள் சேவைக்காக திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதன் முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்டீவன்ஸ் மற்றும் கார்டன்ஸ் பை தி பே இடையே சுழற்சியில் ரயில்கள் இலவசமாக இயக்கப்படும்.

நேரம் குறைப்பு

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை (TEL) ரயில் நிலையங்களில் நெரிசல் இல்லாத உச்ச நேரங்களில் ரயில்களுக்காக காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

நிலையங்களில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ரயில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இருக்கும் ஒன்பது நிமிட இடைவெளியில் இருந்து குறைந்துள்ளது.

அதே போல, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உச்ச நேரங்களில் வரும் ரயில்களுக்கான நேர இடைவெளி ஐந்து நிமிடங்களாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியது.

TEL பாதையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நேர இடைவெளி மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

ரோட்டில் அடித்துக்கொண்டு உருண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 4 பேர் கைது: “மானத்தை வாங்காதீங்க பா” – சக ஊழியர்கள் காட்டம் (வீடியோ)

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை பயணிகளுக்கு நற்செய்தி – காத்திருக்கும் நேரம் குறைப்பு