ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் பங்களாதேஷ் ஆடவர் மூழ்கினாரா? – வலைத்தளத்தில் பரவிய செய்தி; போலீஸ் தரப்பு கூறியதென்ன?

Mothership reader

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் ஒருவர் மூழ்கிய இறந்ததாக TikTok மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் செய்தி வைரலாக பரவியது. இதனை அடுத்து, அதுபோன்ற உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் கடந்த ஏப். 15 அன்று இரவு 11:30 மணிவாக்கில் உதவி வேண்டி அழைப்பு வந்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது, ஆனால் SCDF வீரர்களின் உதவி அங்கு தேவைப்படவில்லை என்றும் அது கூறியது.

கனவுகளோடு வேலைக்கு சென்ற முதல் நாள்… லிப்ட்டில் இருந்து விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த மலேசிய ஊழியர்!

அன்று இரவு ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடற்கரைக்கு அருகில் தேடல் மற்றும் மீட்பு முயற்சியில் வீரர்கள் ஈடுபடுபட்டது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்க் காவல் படையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் பிரிவின் (SCDF) துணை மருத்துவப் பணியாளர்கள் போன்ற அவசரகாலப் படைகள் அங்கு காணப்பட்டன.

அந்தப் பகுதி போலீஸ் படையால் சுற்றி வளைக்கப்பட்டது, அதே நேரத்தில் பொதுமக்களும் அந்த பகுதியைச் சுற்றி குவிந்தனர்.

நீரில் மூழ்கியதாகக் கூறப்படும் நபர் வேறொரு இடத்தில் உயிருடன் காணப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்தவர்கள், தேடப்பட்ட அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என ஊகித்தனர்.

பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை