பயங்கர ஆயுதங்களுடன் கலவரம்…மேலும் 7 பேர் கைது!

Eu Tong Sen Street riot arrest
Clarke Quay brawl: Police arrest another 6 men & 1 woman

Eu Tong Sen ஸ்ட்ரீட்டில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 19) பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்த வழக்கு தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிறு அன்று, 21 முதல் 40 வயதுக்குட்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் பயங்கர ஆயுதத்துடன் கலகத்தில் ஈடுபட்டதாக நேற்று குற்றம் சாட்டப்பட்டனர்.

உலகின் முதல் ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட கோழி இறைச்சி – சிங்கப்பூரில் விற்பனை!

அதில் 30 வயதான ஐந்தாவது நபர் மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக இன்று குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

7 பேர் கைது

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, 22 முதல் 31 வயது வயதுக்குட்பட்ட மேலும் 6 ஆண்களையும், 22 வயது பெண்ணையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு பேரும் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த 6 பேரில் நான்கு பேர் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக இன்று குற்றம் சாட்டப்படும்.

மேலும், 26 மற்றும் 31 வயதுடைய மற்ற இரண்டு ஆண்கள் மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தியது மற்றும் பயங்கர ஆயுதத்தால் கலகம் செய்தது ஆகியவை தொடர்பாக நாளை குற்றம் சாட்டப்படும்.

22 வயதுடைய பெண்ணின் தொடர்பு குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்தனர்.

சட்டம்

சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குழுவில் ஒருவராக இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வேண்டுமென்றே ஆயுதத்தால் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், மற்றும் பிரம்படி அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

பயங்கர ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி விதிக்கப்படலாம்.

ஆசியாவில் முதல் நாடாக சிங்கப்பூர் வந்தடைந்த COVID-19 தடுப்பூசி மருந்து!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…