சிங்கப்பூரில் போலி S$10,000 பண நோட்டை பயன்படுத்தியதாக 3 பேர் கைது

fake S$10,000 note using arrested
(Photo: SPF)

சிங்கப்பூரில் போலி S$10,000 பண நோட்டை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை (செப். 25) தெரிவித்துள்ளது.

பிளாக் 449 கிளெமென்டி அவென்யூ 3-ல் உள்ள ஒரு வங்கியில் போலி S$10,000 பண நோட்டை ஒருவர் வழங்கியது குறித்து கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் காவல்துறைக்கு புகார் வந்தது.

தொடரும் உயிரிழப்பு – மேலும் 3 பேர் கிருமித்தொற்றால் மரணம்

வங்கியில், போலி பண நோட்டை சிறிய மதிப்புடைய பணமாக மாற்றித்தருமாறு அந்த ஆடவர் கேட்டதாக செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், சுதாரித்துக்கொண்ட வங்கி ஊழியர்கள் அந்த நோட்டு போலியானது என அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் 58 வயது ஆடவரை கைது செய்தனர்.

பின்னர் 37 மற்றும் 33 வயதுடைய மற்ற இரண்டு பெண்களின் அடையாளங்களையும் கண்டறிந்தனர். அவர்களுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

போலி S$10,000 பண நோட்டு, சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிவப்பு பாக்கெட் மற்றும் ஒரு போலி ஆவணம் ஆகியவை இதில் கைப்பற்றப்பட்டன.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 பேர் கைது – காட்டுப்பகுதியில் கண்டுபிடிப்பு