சிங்கப்பூர் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய ஜெர்மனி பிரதமர்!

Photo: Singapore Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் (German Federal Chancellor Olaf Scholz), இஸ்தானாவில் நேற்று (14/11/2022) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள ஜெர்மனி பிரதமர், சிங்கப்பூர் அதிபருடன் சந்திப்பு!

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “உக்ரைன் போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் தாக்கம் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் நல்ல விவாதம் செய்தோம். இது வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு போன்ற புதிய பகுதிகளில் ஒத்துழைக்கும், அதே வேளையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற விவாதங்களின் தற்போதைய பகுதிகளை ஆழமாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது.

காலநிலை நடவடிக்கை. நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கத்திற்கான ஜெர்மனி- சிங்கப்பூர் கட்டமைப்பில் இரு நாடுகளும் நேற்று கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கைகள் நமது ஒத்துழைப்பை எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கச் செய்யும் மற்றும் நமது மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வரும்.

சிங்கப்பூரில் மாதத்திற்கு S$2,200 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பரிந்துரை

புவிசார் அரசியல் (Geopolitical) மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் (Economic Uncertainties), பருவநிலை மாற்றம் (Climate change) மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் (Rising Energy Costs) போன்றவற்றை எதிர்கொள்ளும் பெரிய மற்றும் சிறிய நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளாக, சிங்கப்பூரும், ஜெர்மனியும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, பிராந்திய மற்றும் உலக அரங்கிலும் நமது ஒத்துழைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.