அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள ஜெர்மனி பிரதமர், சிங்கப்பூர் அதிபருடன் சந்திப்பு!

Photo: President Of Singapore Official Facebook Page

பிரதமராகப் பொறுப்பேற்று முதன்முறையாக, ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் (German Federal Chancellor Olaf Scholz), இஸ்தானாவில் நேற்று (14/11/2022) சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை (President Of Singapore, Halimah Yacob) நேரில் சந்தித்துப் பேசினார்.

பாலி தீவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸை இஸ்தானாவில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டிஜிட்டல் மயமாக்கல், இணையப் பாதுகாப்பு (cybersecurity) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதித்தோம்.

அமெரிக்க- சீனா உறவுகளின் நிலை (US-China relations), வரவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு (G20 Summit) மற்றும் உக்ரைன் போர் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். சுதந்திர வர்த்தகம், பலதரப்பு மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் கொண்ட ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளாக, நாங்கள் ஐநா போன்ற பலதரப்பு மன்றங்களிலும் நன்கு ஒத்துழைத்துள்ளோம்.

உயிரைக் காக்கும் நாய்! – ரத்தத்தில் சர்க்கரை குறைந்தால் சேவை செய்யும் செல்ல நாய்;இப்படிதான் பயிற்சி கொடுக்கணும்!

இரு நாடுகளுக்கிடையேயான அன்பான மற்றும் நீண்டகால நட்பை உறுதிப்படுத்தினோம். மேலும் நமது மக்களுடனான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸை சிறப்பிக்கும் வகையில், இஸ்தானாவில் உள்ள ஒரு வகை ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.