சிங்கப்பூரில் விதிகளை மீறிய 2 கடைகளை மூட உத்தரவு…15 நபர்களுக்கு அபராதம்

Fined breaching Covid-19 measures
(PHOTO: Singapore Tourism Board)

சிங்கப்பூரில் இரண்டு உணவு மற்றும் பான விற்பனை கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதற்காக மூன்று கடைகள், 15 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் 1 ராஃபிள்ஸ் பிளேஸுக்கு வெளியே இறந்து கிடந்த ஆடவர்…

கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று, Meltz Resto-Bar (24 ரேஸ் கோர்ஸ் சாலை) பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை பலமுறை மீறியதாக கண்டறியப்பட்டது.

நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) கூறுகையில்,

  • உணவகம் 10 நபர்களைக் கொண்ட குழுவை ஒரே மேஜையில் ஒன்றாக அமர அனுமதித்துள்ளது
  • வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகளை நடத்தத் தவறியது
  • வாடிக்கையாளர்களுக்கு SafeEntry-யை செயல்படுத்தத் தவறியது

ஆகிய மீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

மேலும் அதே நாளில், Club V5 Tycoon (21 Cuscaden ரோடு, Ming Arcade) இரவு 11:15 மணிக்கு வாடிக்கையாளர்களை மது அருந்த அனுமதித்தது கண்டறியப்பட்டது.

MSE தகவலின் படி, ஆண்டு இறுதியில், 8 உணவு மற்றும் பான கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

உணவு மற்றும் பான கடைகளுக்கும் 26 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு விதி மீறல்கள் தொடர்பாக 51 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“சிறுவனை காணும்போது என் மருமகன் நினைவு வந்தது” – சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…