இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய ஐந்து பேருக்கு கிருமித்தொற்று உறுதி..!

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய ஐந்து பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் சிங்கப்பூருக்கு திரும்பியவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: “சிங்கப்பூரை சிறப்பாக வழிநடத்த இந்த அணி சிறந்த குழுவாக விளங்கும்” – பிரதமர் லீ..!

அவர்களில் இரண்டு நிரந்தரவாசிகள் அடங்குவர், ஒருவர் ஜூலை 12ஆம் தேதி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது ஆடவர் ஒருவர்.

மீதமுள்ள நபர்களில் 3 வயது சிறுவனும் அடங்குவார், அவர்கள் ஜூலை 11 முதல் ஜூலை 13 வரை இந்தியாவில் இருந்து வந்ததாக MOH தெரிவித்துள்ளது.

அனைவருமே சிங்கப்பூருக்கு வந்தபின் 14 நாள் தனிமையில் வைக்கப்பட்டனர். மீதமுள்ள 505 பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சிங்கப்பூரில் நேற்று மேலும் 513 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க : ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg