‘சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

ஹாங்காங்கில் ஒமிக்ரான், கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளின் விமானங்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது. அதேபோல், இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது ஜனவரி 8- ஆம் தேதி முதல் ஜனவரி 21- ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தொடர்ந்து குறைந்து வரும் வேலையின்மை விகிதம்!

இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சிங்கப்பூரில் (Singapore) இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு (San Francisco) ஹாங்காங் வழியாக இருமார்க்கத்திலும் விமான சேவையைத் தொடர்ச்சியாக இயக்கி வந்த நிலையில், நேற்று (06/01/2022) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் ஜனவரி 8- ஆம் தேதி முதல் ஜனவரி 20- ஆம் தேதி வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான SQ7 என்ற விமானம், வாரத்திற்கு மூன்று முறை அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை வழங்கும். அமெரிக்க பயணிகளுக்கு ஹாங்காங் அரசாங்கம் (Hong Kong Government’s) தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் ஹாங்காங்கில் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்காது.

ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதிக்கு சிங்கப்பூரின் உயரிய விருது வழங்கப்பட்டது!

எனினும், சிங்கப்பூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் SQ8 என்ற விமானம் வழக்கம்போல் ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கும். பின்னர், அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும், இந்த இடையூறுகளால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் நாங்கள் அணுக இருக்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளது.

MaskPure™ AIR+ முகக்கவசத்தை எப்படி பயன்படுத்துவது? எப்படி துவைப்பது?- விரிவான தகவல்!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.singaporeair.com/en_UK/in/home# என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.