வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் வழங்கிய நிறுவனத்திற்கு $119,500 அபராதம்!

foreign employees underpay fined
Twelve Cupcakes fined S$119,500 for underpaying foreign employees

இரண்டு ஆண்டுகளில், ஏழு ஊழியர்களுக்கு சுமார் S$114,000 குறைவாக ஊதியம் வழங்கியதாக, Twelve Cupcakes நிறுவனத்திற்கு S$119,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தளமாகக் கொண்ட துன்சேரி குழுமம் (Dhunseri Group) அந்த நிறுவனத்தை வாங்கியது. வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் 15 குற்றச்சாட்டுகளை டிசம்பர் மாதம் அது ஒப்புக்கொண்டது.

சிங்கப்பூரில் 3 கதவுகளுடன் இரண்டு அடுக்கு பேருந்து சேவை- காணொளி!

இதேபோன்ற மேலும் 14 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

குற்றவாளிகளைக் கண்டறிவது கடினம் என்றும், இதன் விளைவாக நிறுவனம் கணிசமான லாபத்தை ஈட்டியது என்றும் நீதிபதி கூறினார்.

இருப்பினும், நிறுவனம் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய சம்பளத்தை திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதாவது, 2016 டிசம்பர் முதல் 2018 நவம்பர் வரை, நிறுவனம் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட மிகக் குறைவாகச் சம்பளம் அந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு S$2,200 முதல் S$2,600 வரை சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு S$200 மற்றும் S$1,200க்கும் இடைப்பட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள் முந்தைய நிர்வாகத்தால் நிறுவப்பட்ட பழைய நடைமுறையைத் தொடர்ந்ததாகவும் முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.

நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…