சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு பிரம்படிகள் விதிப்பு

Capital punishment in Singapore is a legal penalty

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த அந்த ஊழியருக்கு நேற்று டிசம்பர் 4ஆம் தேதி ஓராண்டு சிறைத்தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

வெளிநாட்டு ஊழியருக்கு சொன்ன சம்பளம் கொடுக்காமல் அலைக்கழித்த முதலாளி – சட்டப்படி அணுகி S$13,677 தொகையை வாங்கி அசத்திய ஊழியர்

இவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவது இது முதல் முயற்சி அல்ல. இதற்கு முன்பு 2015 மற்றும் 2019-க்கும் இடையில் குடிநுழைவு விதிகளை மீறி குற்றங்களில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 36 வயதான அவர் தண்டனை பெற்றார்.

சிங்கப்பூரில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இந்தோனேசியாவின் படாமிலிருந்து வேகப் படகு மூலம், கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று பின்னிரவு நேரத்தில் தானா மேரா கடற்கரைச் சாலைக்கு அருகில் உள்ள கரையோரத்தில் தரையிறங்கினார் என்று சொல்லப்பட்டுள்ளது.

பின்னர் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அவர் தப்பிச் சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நவ.19 ஆம் தேதி இரவு 11.50 மணியளவில் சிங்கப்பூர் கடற்பகுதியில் படகு நுழைந்ததை கண்ட காவல்துறையின் கடலோர காவல்படை அதிகாரிகள் கடற்கரைச் சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் சோதனை நடத்தினர்.

இதனை அடுத்து, நவம்பர் 20 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு இந்தோனேசியரான அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் அடையாள ஆவணங்கள் அல்லது சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு எதுவும் இல்லை.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் கைது

லாரியையும் விட்டுவைக்கலயா.. அலேக்கா திருடி சென்ற 3 பேர் – மடக்கிய போலீஸ்