சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் கைது

Two foreigners arrested illegal enter Singapore 
Photo: Singapore Police Force

Two foreigners arrested illegal enter Singapore: சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு வெளிநாட்டவர்களை போலீசார் நேற்று (நவ.20) கைது செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.58 மணியளவில், தானா மேரா கோஸ்டல் சாலையின் கரையை நோக்கி வேகமாகச் செல்லும் படகு ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இயந்திரத்தில் தலை சிக்கி மரணித்த வெளிநாட்டு ஊழியர் – இயந்திரத்தை பராமரிக்கவில்லை என்பதே உண்மை…

இதனை அடுத்து அதிகாரிகள் அவர்களை வெற்றிகரமாக மடக்கி பிடித்து கைது செய்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் இருவரிடமும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மோட்டார் பொருத்தப்பட்ட 5 மீட்டர் நீளமுள்ள படகையும், சாட்சியமாக போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்த விசாரணை நடந்து வருவதாக SPF தெரிவித்துள்ளது.

36 மற்றும் 33 வயதுடைய அந்த இருவர் மீதும் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்றுக்கு குறையாமல் பிரம்படி விதிக்கப்படலாம்.

மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை