வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்..!

(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசு சிங்கப்பூரர்களைப்போல் அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் அத்தியாவசியமான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்து தருகின்றது என்று அங்கு வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்கCOVID -19: சிங்கப்பூரில் தொலைபேசி வழியாக மனோவியல் ரீதியான ஆதரவு..!

இன்னும் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், தொலைபேசி மற்றும் இன்டர்நெட் வசதிகளையும் சிறப்பாக செய்து தருகின்றனர்.

மேலும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், MOM மற்றும் MOH அதிகாரிகளுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

“நாங்கள் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களில் ஒருவர்” என்ற குரல் சில வாரங்களுக்கு முன்பே ஒலிக்கத்…

Posted by Subha Senthilkumar on Wednesday, April 22, 2020

நாங்கள் சிங்கப்பூரர்களுக்கு அக்கறை காட்டுவது போல் உங்கள் மீதும் அக்கறை கொள்வோம், இந்த சிரமமான காலகட்டத்தில் உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி, நாங்கள் உங்களது சுகாதாரம், நலன், வாழ்வாதாரம் ஆகியவற்றை கவனித்துக்கொள்வோம் என சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிரதமர் லீ ஹுசியன் லூங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்கசிங்கப்பூரில் புதிதாக 897 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!