வெளிநாட்டு ஊழியர்களை தூங்க விடாமல் தொல்லைதரும் மூட்டை பூச்சி: மன அழுத்தம், ஆன்சிட்டி ஏற்படும் அபாயம் – என்னதான் செய்றது?

New Dorm COVID-19 case
Photo: Today

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மறைந்திருக்கும் ​​மூட்டைப் பூச்சி வெளியே வந்து உங்களைத் தாக்கும், அட என்னடா இது என்று உதறிவிட்டு படுத்தாலும் அவை மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்யும்.

இந்த மூட்டை பூச்சி கடியால் மன அழுத்தம், ஆன்சிட்டி ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக மூட்டை பூச்சிகள் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்

அதை எப்படி ஒழித்துக்கட்டுவது என நம் சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் புலம்புவதை காண முடிகிறது.

அதனை சிறப்பு பூச்சி அழிப்பு குழுக்களை வைத்து மருந்து அடித்து ஒழித்து கட்டலாம். இல்லையெனில் நாமே பாதுகாப்பான முறையில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி அடிக்கலாம்.

120 டிகிரி பாரன்ஹைடு வெப்ப நிலையை மூட்டை பூச்சி தாங்காது, எனவே 120 டிகிரி வெப்ப நீரில் மூட்டை பூச்சி இருக்கும் பொருட்களை சுத்தம் செய்யலாம்.

மூட்டை பூச்சி கடி இருந்தால் தூக்கமின்மை ஏற்படும், இதனால் மன அழுத்தம், ஆன்சிட்டி போன்ற நோய்களும் ஏற்படலாம்.

எனவே படுக்கை அறையை சுத்தமாக வைக்க முயற்சி செய்யுங்கள். நிரந்தர தீர்வுக்கு அதை உடனடியாக விரட்ட முற்பட வேண்டும்.

ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தலைவலி கொடுக்கும் “மூட்டைப் பூச்சி” – தப்பிக்கும் எஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்!

“சுத்தியலை வச்சி மண்டையை உடைச்சிருவேன்” – பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல்