வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு… பாதிக்கப்படும் சிங்கப்பூர் வாசிகள்!

COVID-19 cases Singapore rise
Photo: TODAY

ரஷ்யா-உக்ரைன் மோதலால், இதுவரை சிங்கப்பூருக்கு வரும் கட்டுமானப் பொருட்களின் குறிப்பிடத்தக்க அளவில் இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

மேலும் HDB பில்ட்-டு-ஆர்டர் (BTO) திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் வரும் இந்தியா உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் புதிய அப்டேட் – Work Pass-க்கும் பொருந்தும்!

விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தற்போது நிலவிவரும் சர்வதேச அரசியல் நெருக்கடியால் ஏற்படும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பின் விளைவாக HDB குடியிருப்புகள் கட்டுவதில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற நாடாளுமன்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

எஃகு கம்பிகள் மற்றும் தாயார்-நிலை கலவை கான்கிரீட்டின் விலைகள் முறையே சுமார் 17 சதவீதம் மற்றும் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே போல, HDB கட்டுமானப் பொருட்களின் விலைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களின் Work pass அனுமதிக்கு தேவைகளுக்கு இது கட்டாயம் – தங்கும் விடுதி, கட்டுமான ஊழியர்களுக்கு Mandatory!

கட்டுமான திட்டத்தில் மனிதவள பற்றாக்குறையைப் பொறுத்தவரை, பாதுகாப்பான முறையில் பல்வேறு நாடுகளில் இருந்து ஊழியர்களை கொண்டு வர நிறுவனங்களுடன் இணைந்து HDB செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான செலவையும் HDB பகிர்ந்து கொண்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு விதிக்கப்படும் கடும் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறு போன்ற காரணிகளின் விளைவாக அந்த திட்டங்களில் தாமதம் நிலவுதாகவும் அவர் கூறினார்.

இதனால் சிங்கப்பூரர்கள் தங்கள் பிளாட்டுகளை சொன்ன நேரத்தில் வாங்குவதில் சிக்கல் நிலவுவதாவும் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் தேவை மிகப்பெரியது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும் – மீறினால் முதலாளிகளின் Work Pass சலுகை ரத்து