இரண்டு வாரங்களில் 2 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம் – நம் பாதுகாப்பு முக்கியம்

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர்.
ShutterStock

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர்.

துவாஸில் உள்ள ஒரு வேலையிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்த கட்டுமான ஊழியர் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து ஏற்பட்ட படுகாயங்களால் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்

36 வயதான பங்களாதேஷ் நாட்டவரான அவர், சூரிய வெளிச்சம் உள்ளே வர ஸ்கைலைட் சன்னலை பொருத்திக்கொண்டிருக்கும் போது 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் என மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

இந்த சம்பவத்துடன் சேர்த்து 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை குறைந்தது 21 வேலையிட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு, 29 வயதான பங்களாதேஷ் கட்டுமான ஊழியர் ஒருவர் கழிவு தொட்டி தாக்கியதில் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம், 371B செம்பவாங் அவென்யூவில் உள்ள வேலையிடத்தில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்தது.

இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2 வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஊழியர்கள் வேலையிடங்களில் தங்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள்.

நம்மை நம்பி குடும்பம் இருக்கிறது என்பதை நினைவுகூர்ந்து கவனமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் வேலைகளை அமைத்துக்கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் 36 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..

வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்