இரு வெளிநாட்டவர்களுக்கு அறையை வாடகைக்கு விட்ட நபருக்கும் சிறை.. அதிக காலம் தங்கிய இருவருக்கும் சிறை

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

வெளிநாட்டவருக்கு அறையை வாடகைக்கு விடுத்த ஆடவர் ஒருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

அந்த வெளிநாட்டவர் அதிக காலம் அங்கு தங்கியிருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ இத செய்யாதீங்க – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

53 வயதான லிம் சின் கியான் என்ற ஆடவர் தற்போது 58 வயதாகும் ஜாவோ ஷுன் என்ற வெளிநாட்டவருக்கு அறையை வாடகைக்கு விட்டுள்ளார்.

லிம், பெடோக் ரிசர்வோர் பிளாட்டில் உள்ள தனது அறையை மாதம் $550க்கு வாடகைக்கு கொடுத்ததாக ICA தெரிவித்துள்ளது.

அதே போல், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஜாவோவுக்கு தெரிந்த ஜின் சியா என்ற இன்னொரு ஆடவருக்கும் அதே மாதக் கட்டணத்திற்கு மற்றொரு அறையை வாடகைக்கு கொடுத்துள்ளார் லிம்.

அவர்கள் இருவரும் வெளிநாட்டினர் என்பதை அறிந்திருந்தும் லிம் தங்க வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜாவோவும் ஜின்னும் அவகாசம் முடிந்தும் அதிக காலம் தங்கியிருப்பதை லிம் கண்டுபிடித்தார், ஆனாலும் ஆகஸ்ட் 30 வரை அவர்களைத் தொடர்ந்து தங்க அனுமதித்துள்ளார் லிம்.

சீன நாட்டை சேர்ந்த ஜாவோ மற்றும் ஜின் ஆகிய இருவருக்கும் முறையே 2009 மற்றும் 2006 இல் வருகை அனுமதி காலாவதியாகியுள்ளது.

அதன் பிறகும் சிங்கப்பூரில் அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக இந்த ஆண்டு ஆக.30 அன்று கைது செய்யப்பட்டனர்.

ஜாவோ மற்றும் ஜின் ஆகிய இருவருக்கும் தலா ஆறு மாதம் சிறைத்தண்டனையும், மேலும் $2,500 மற்றும் $3,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கடும் விபத்து: லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்