குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

Photo: Temasek Foundation

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் (AIR+ disposable surgical masks) வழங்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் (Ministry of Trade and Industry- ‘MTI’) இருந்து பெற்று தெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் (Temasek Foundation) விநியோகிக்க உள்ளது.

மகா சிவராத்திரி: மார்ச் 1- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

இந்த இலவச அறுவை சிகிச்சை முகக்கவசங்களின் விநியோகம் வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இலவச முகக்கவசங்களின் விநியோகம் வரும் மார்ச் 13- ஆம் தேதி அன்று நிறைவடையும். தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகள் மற்றும் கடைத்தொகுதிகளில் மட்டுமே இலவச அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும். இதில், ShengSiong, NTUC FairPrice, Cold Storage, Giant ஆகிய பேரங்காடிகளும் அடங்கும்.

இலவச அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்?

நீலம் அல்லது ஆரஞ்சு நிறத்தில் உள்ள சமூக, சுகாதார உதவி அட்டைகளைக் கொண்ட (Valid Blue or Orange CHAS card (or) Public Assistance / Special Grant card (for ComCare Long-Term Assistance Group) சிங்கப்பூரில் வசிக்கும் நபர்களுக்கு, இந்த இலவச அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 50 முகக்கவசங்கள் அடங்கிய ஒரு பெட்டி வழங்கப்படும்.

அட்டைதாரர்கள் தங்கள் சார்பாக இலவச முகக்கவசங்களைச் சேகரிக்க தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அங்கீகரிக்கலாம்.’

இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://stayprepared.sg/staymasked/ என்ற இணையதளத்தை அணுகலாம் (அல்லது) 1800- 738- 2000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) staymasked@temasekfoundation.org.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்கு AIR+ மருத்துவ தர அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் (AIR+ medical grade surgical masks) 99.9 சதவீத பாக்டீரியாவையும், 98 சதவீதத்திற்கும் அதிகமான துகள்களையும் வடிகட்டுகின்றன என்று தெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த இலவச முகக்கவசங்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பெறும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சிங்கப்பூரில் தெருக்களுக்கு பெயர்கள் எங்கிருந்து வந்தது? பலரும் அறியாத தகவல்! – Street Names in Singapore

கொரோனா, ஒமிக்ரான் பரவலில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க இந்த அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.