இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அரசுமுறைப் பயணமாக, கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி அன்று நார்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவிற்கு (Oslo) சென்றிருந்தார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். பின்னர், நார்வே நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸுக்கு சென்ற அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், அங்கு இந்தோ- பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் (Ministerial Forum on Cooperation in the Indo-Pacific) கலந்துக் கொண்டார்.

மகா சிவராத்திரி: மார்ச் 1- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

சர்வதேச கூட்டாண்மைகளுக்கான ஐரோப்பிய ஆணையர் ஜூட்டா உர்பிலைனனுடன் (European Commissioner for International Partnerships, Jutta Urpilainen) இணைந்து இணைப்பு மற்றும் டிஜிட்டல் சிக்கல்கள் குறித்த வட்டமேசை விவாதத்திற்கு அவர் தலைமை தாங்கினார். ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் (President of the Council of the European Union) என்ற முறையில் பிரான்ஸ் இந்தக் கூட்டத்தை நடத்தியது.

வட்டமேசையில் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஒருமுனையில் இருந்து பல்துருவ உலகத்திற்கு மாறுவது, டிஜிட்டல் புரட்சிக்கு மத்தியில் தனியுரிமையைப் பாதுகாக்கும், அதே வேளையில் இயங்கக்கூடிய, பொதுவான மற்றும் திறந்த தரநிலைகளின் அவசியம் மற்றும் உலகளாவிய பொது மக்களின் பகிரப்பட்ட சவால் குறித்து பேசினார். நமது டிஜிட்டல் தொடர்புகள் நம்பிக்கை, தனியுரிமை பாதுகாப்பு (Protection of privacy), இணையப் பாதுகாப்பு (Cyber Security) மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் தெருக்களுக்கு பெயர்கள் எங்கிருந்து வந்தது? பலரும் அறியாத தகவல்! – Street Names in Singapore

உக்ரைன்- ரஷ்யா (Ukraine-Russia) எல்லையில் பதற்றம் அதிகரிப்பது மற்றும் பிரிந்து சென்ற இரண்டு உக்ரைனியப் பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவு ஆகியவற்றில் சிங்கப்பூரின் ஆழ்ந்த கவலையை மீண்டும் வலியுறுத்தினார். உக்ரைனின் சுதந்திரம் (Independence), இறையாண்மை (Sovereignty) மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அமைதியான தீர்வை நோக்கி சில நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்களைச் சந்தித்த அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பாரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (23/02/2022) சிங்கப்பூர் திரும்புகிறார்.

வெளிநாட்டு ஊழியர்களை நிராகரிக்கிறதா சிங்கப்பூர்…?

இதனிடையே, இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டத்திற்கு பின்னர், இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.