மகா சிவராத்திரி: மார்ச் 1- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் Geylang East Ave 2- ல் அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அந்த வகையில், வரும் மார்ச்- 1 ஆம் தேதி மகா சிவராத்திரி ஆகும். அந்த நாளில் ஸ்ரீ சிவன் கோயிலில் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டியிருக்கிறது.

22.02.22ஐ கொண்டாடிய சிங்கப்பூர்…அடேங்கப்பா நேற்று ஒரே நாளில் இவ்வளவு திருமணமா.?

இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகா சிவராத்திரி நாளன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ளது.

அதில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளால், ஸ்ரீ சிவன் கோயிலில் வரும் மார்ச் 1- ஆம் தேதி அன்று நடக்கும் மகா சிவராத்திரி நாளில் கீழ்வரும் மாற்றங்கள் பொருந்தும்.

சிங்கப்பூரில் தெருக்களுக்கு பெயர்கள் எங்கிருந்து வந்தது? பலரும் அறியாத தகவல்! – Street Names in Singapore

ஸ்ரீ சிவன் கோயில் மார்ச் 1- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணி முதல் மார்ச் 2- ஆம் தேதி அன்று காலை 08.00 மணி வரை கோயில் திறக்கப்பட்டியிருக்கும். கோயிலுக்குள் எந்நேரமும் அதிகபட்சமாக 350 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு நேரத்தில் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

கீழ்வரும் பொருட்களை கோயில் வளாகத்தில் பக்தர்கள் வாங்கலாம். மார்ச் 1- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கு விபூதி குடம், இரவு 08.30 மணிக்கு பால் குடம், அதிகாலை 02.00 மணிக்கு சந்தன குடம் வாங்கலாம்.

கோயிலில் முன்கூட்டியே தயார் செய்த குடங்கள் மட்டுமே நேர்த்திக்கடனாக செலுத்தப்படும். கோயிலில் அமைக்கப்பட்ட பாதை வழியே நடந்தவாறு தரிசனம் செய்தப் பிறகு, அங்கிருந்து புறப்படும்படி, கோயில் நிர்வாகம் பக்தர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களை நிராகரிக்கிறதா சிங்கப்பூர்…?

கோயில் வளாகத்தில் உணவு உண்பதற்கும் தண்ணீர் அருந்துவதற்கும் அனுமதி இல்லை. கோயில் வளாகத்தில் பக்தர்கள் இரவு முழுக்க கண் விழித்து இருப்பதற்கு அனுமதி கிடையாது. முதியோர், இளம் பிள்ளைகள், உடற்குறையுள்ளோர் வீட்டிலிருந்து வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். மகா சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வும், கலை நிகழ்ச்சிகளும் https://heb.org.sg/ என்ற இணையதள பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இது குறித்து உங்களது புரிந்துணர்வையும், ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.