சிங்கப்பூரில் Funan Mall உள்ளிட்ட COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களின் பட்டியல் வெளியீடு..!

Funan Mall, McDonald’s at Lucky Plaza among places visited by Covid-19 patients while infectious
Funan Mall, McDonald’s at Lucky Plaza among places visited by Covid-19 patients while infectious (Photo: Najeer Yusof/TODAY)

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் மேலும் சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

அவை Funan Mall, லக்கி பிளாசாவில் உள்ள McDonald’s மற்றும் நார்த் பாயிண்ட் சிட்டியில் இரண்டு உணவகங்கள் ஆகியவை ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு..!

Funan Mall

ஜூன் 24 அன்று காலை 10.15 மணி முதல் 11.20 மணி வரை,107 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள Funan மாலுக்கு சென்றுள்ளனர்.

நார்த்பாயிண்ட் சிட்டி

ஜூன் 25 அன்று இரவு 7.50 மணி முதல் இரவு 8.20 மணி வரை, 930 யிஷுன் அவென்யூ 2 இல் உள்ள நார்த்பாயிண்ட் சிட்டி சென்றுள்ளனர்.

Xin Wang Hong Kong Cafe and Joe & Dough cafe

ஜூன் 28 அன்று மாலை 1.20 மணி முதல் மாலை 5.55 மணி வரை மாலில் உள்ள Xin Wang Hong Kong Cafe and Joe & Dough cafe சென்றுள்ளனர்.

McDonald’s

ஜூன் 28 அன்று காலை 10.40 மணி முதல் 11.30 மணி வரை ஆர்ச்சர்ட் சாலை, லக்கி பிளாசாவில் உள்ள மெக்டொனால்டு சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 ஆதரவு மானியங்களைப் பெற ஏமாற்றிய இருவர் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg