சிங்கப்பூரில் COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த புதிய இடம்..!

Golden Village VivoCity added to places visited by COVID-19 cases
Golden Village VivoCity added to places visited by COVID-19 cases

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக திரையரங்கை சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், Vivocity கடைத்தொகுதியில் உள்ள Golden Village திரையரங்கு சேர்க்கப்பட்டுள்ளது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கனமழை காரணமாக கிரேக் ரோட்டில் திடீர் வெள்ளம்..!

கடந்த ஜூலை 30ஆம் தேதி பிற்பகல் மணி 3.40 முதல் மாலை மணி 6.30 வரை தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் அங்கு சென்றுவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் ஏதும் தென்பட்டால், மருத்துவரை உடனே நாடும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg