சிங்கப்பூரில் முழு சர்க்யூட் பிரேக்கர் என்னும் அதிரடி திட்டம் மீண்டும் விதிக்கப்படுமா? – அமைச்சர் விளக்கம்

(Photo: Zhangxin Zheng)

சிங்கப்பூரில் சமீபத்தில் மெதுவாக அதிகரித்த கோவிட் -19 பாதிப்புகள் மத்தியில், தொடர்ச்சியாக பல்வேறு கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

முழு சர்க்யூட் பிரேக்கர் என்னும் அதிரடி திட்டம் மீண்டும் விதிக்கப்படுமா என்பது தொடர்பாக ஊடகங்களின் கேள்விக்கு, சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் பதிலளித்தார்.

திடீரென உடைந்து நொறுங்கிய SBS பேருந்தின் கண்ணாடி கதவு…

அதில், அரசாங்கம் தொடர்ந்து கிருமிப்பரவல் நிலைமையைக் கண்காணித்து பின்னர் முடிவுக்கு வரும் என்றார்.

மேலும், முடிவு எடுப்பதற்கு முன்னர், கருத்தில் கொள்ள வேண்டிய மற்றும் கண்காணிக்கப்பட வேண்டிய சில காரணிகள் உள்ளன என்று ஓங் கூறினார்.

இந்த கிருமி பாதிப்புகள் எவ்வாறு ஏற்படுகிறது என்பது வரும் நாட்கள் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தடுப்பூசி போட்டவர்களிடமோ அல்லது தடுப்பூசி போட்ட நபர்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமோ நோயின் தீவிரத்தை அரசாங்கம் ஆய்வு செய்யும் என்றும் ஓங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காரணிகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, ​​சரியான முடிவுகளை எடுப்போம் என்றார் அவர்.

இந்தியாவின் “முக்கிய பங்காளி” சிங்கப்பூர் – ஆக்ஸிஜன் தொடர்பான உதவிகளுக்கு நன்றி கூறிய இந்துஸ்தான் டைம்ஸ்!