Grab பயணிகள் மீண்டும் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி..!

Grab allows passengers front seat
(Photo: TODAY)

சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 2) முதல், Grab பயணிகள் மீண்டும் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் -19 பரவுவதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக முன் இருக்கையில் அமர தடை விதிக்கப்பட்டு, சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பாதுகாப்பான நாடுகளுடன் மீண்டும் விமான பயணத்தை தொடங்க சிங்கப்பூர் பேச்சுவார்த்தை..!

சமூகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம், அதன் மொபைல் செயலியின் மூலம் முன்பதிவு செய்யும் அனைத்து Grab சேவைகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவல் காரணமாக அதன் பகிர்ந்துகொள்ளும் சேவையான, GrabShare பிப்ரவரியில் இருந்து தடைசெய்யப்பட்டது, அது இன்னும் தொடங்கவில்லை.

முகக்கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில், அபராதம் இன்றி, முன்பதிவை ரத்து செய்ய பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்கள் சவாரிகளையும் ரத்து செய்யலாம்.

இதையும் படிங்க : சாங்கி ஏர்போர்ட் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டியலில் 58வது இடத்திற்கு சரிவு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…