சீனப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

Photo: Minister Iswaran Official Facebook Page

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று சீனப் புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஓமிக்ரான் நோய் பரவலுக்கு மத்தியில் பொதுமக்கள், ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் அரசின் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று (01/02/2022) சீனப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப்பூரில் 5 வாகன நிறுத்துமிடங்களில் நிறுவப்பட்டுள்ள “மின்சார வாகன சார்ஜர்கள்”

நண்பர்கள், குடும்பத்தினருடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு புலி ஆண்டு என்பதால், சிங்கப்பூரில் முக்கிய சாலைகளில் புலி உருவங்களுடன் கூடிய வண்ணமயமான மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தாண்டையொட்டி, ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளனர்.

சீனப் புத்தாண்டையொட்டி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கு வருங்காலமே இல்லையென்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூசிய சம்பவம் – இன்னைக்கும் “கெத்து” குறையாமல் நிற்கும் பின்னணி..!

அந்த வகையில், போக்குவரத்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து சீனப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், அவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பொது விடுமுறை நாட்கள் உட்பட, சிங்கப்பூரை தினமும் நகர வைக்க நமது பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் அயராது உழைக்கிறார்கள்.

“மியான்மரில் மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன”- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

நான் எங்கள் பேருந்து மற்றும் ரயில் கேப்டன்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் சிலரையும் பண்டிகை கால உற்சாகத்தை கொண்டு வருவதற்காக இன்று காலை நேரில் சந்தித்தேன். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக நமது பொது போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.