மனிதவள பற்றாக்குறை… சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி அதிகரிப்பு

(AFP/Roslan RAHMAN)

ஊழியர் நெருக்கடி மற்றும் அதிக செலவுகளை எதிர்கொள்ளும் கட்டுமான, கப்பல் தளம் மற்றும் செயல்முறை துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வரும் மாதங்களில் சில நிவாரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே முதல் டிசம்பர் வரை, சுமார் 15,000 நிறுவனங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி அதிகரிக்கப்படுவதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (மே 8) தெரிவித்துள்ளது.

வேலை அனுமதிக்கான (work pass) புதிய விண்ணப்பங்கள் ஏற்பதை நிறுத்தும் சிங்கப்பூர்

அந்த துறைகளில் உள்ள ஒவ்வொரு Work permit வைத்திருப்பவருக்கான தள்ளுபடி, மாதத்திற்கு S$90 -லிருந்து மாதத்திற்கு S$250 வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

COVID-19 காரணமாக கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான பாதுகாப்பான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க மனிதவள பற்றாக்குறையையும் செலவுகளையும் அதிகரித்துள்ளதாக MOM கூறியுள்ளது.

இந்தத் துறைகளில் work permit வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 60,000 அல்லது 16 சதவீதம் குறைந்துள்ளது.

மே மாதத்தில் அதிகரித்த தீர்வை தள்ளுபடி, முதலாவதாக ஜூன் மாதத்தில் செலுத்தப்படும்.

வளாகத்தில் கரப்பான் பூச்சிகள்… உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு