சிங்கப்பூரில் 1,050 முன்னணி ஊழியர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடப்படும்…!

1,050 Home Team frontline healthcare officers to get COVID-19 vaccine
1,050 Home Team frontline healthcare officers to get COVID-19 vaccine (Getty Image)

உள்நாட்டுக் குழுவைச் சேர்ந்த சுமார் 1,050 முன்னணி சுகாதார பராமரிப்பு ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் COVID-19 தடுப்பூசி போடப்படும் என்று உள்துறை அமைச்சகம் இன்று (ஜன. 11) தெரிவித்துள்ளது.

அதாவது இந்த தடுப்பூசிகளைப் பெறுபவர்களின் விவரம்:

  • சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படையின் (SCDF) அவசர மருத்துவ சேவை (EMS) அதிகாரிகள்
  • உள்நாட்டுக் குழு மருத்துவ சேவைகள் பிரிவின் ஊழியர்கள்
  • சிங்கப்பூர் சிறைச்சாலை மருத்துவ சேவைகள் பிரிவு அதிகாரிகள்

இந்தோனேசிய விமான விபத்து: சிங்கப்பூரர்கள் ஜக்கர்த்தா தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்!

ஆய்வக மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளும், உள்நாட்டு குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் முன்னணி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

மொத்தம் 1,123 உள்நாட்டுக் குழு அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்.

மேலும், 94 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டதாக MHA தெரிவித்துள்ளது. 80 அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1,050 உள்நாட்டுக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான இரண்டாவது தடுப்பூசி போடும் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆறு வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MHA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 42 பேருக்கு COVID-19 பாதிப்புகள் – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…