இந்தோனேசிய விமான விபத்து: சிங்கப்பூரர்கள் ஜக்கர்த்தா தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்!

Sriwijaya flight Singaporeans MFA
(Photo via REUTERS)

இந்தோனேசியாவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா (Sriwijaya Air flight) SJ 182 விமானத்தில் சிங்கப்பூரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் (MFA) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம், 10 குழந்தைகள் உட்பட 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே ராடார் திரைகளில் இருந்து காணாமல் போனது.

சிங்கப்பூரில் புதிதாக 42 பேருக்கு COVID-19 பாதிப்புகள் – MOH

ஜனவரி 9, அன்று ஸ்ரீவிஜயா விமானம் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து சிங்கப்பூர் அரசாங்கம் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தோனேசியா அரசாங்கத்திற்கும், குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரின் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு, இந்தோனேசியாவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவுடன் இணைந்து கருப்பு பெட்டிகளைக் கண்டுபிடிக்க உதவ முன்வந்தது.

இது தொடர்பாக ஏதேனும் உதவி இருக்குமெனில் சிங்கப்பூரர்கள் ஜக்கர்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை மீறி சாலை தடுப்பில் சீறிப்பாய்ந்த கார் (காணொளி) – 3 பேர் மருத்துவமனையில்…

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…