காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்!

காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்!
Photo: Singapore Red Cross

 

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள, காஸா நகரத்தில் வசிக்கும் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். அத்துடன், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போரில் காயமடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மருத்துவமனை நிரம்பியதால் பலர் சிகிச்சைப் பெறாமல் உயிரிழந்து வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினர் ஐவரிடம் 3 கிமீக்கு S$100 கட்டணம் வசூல் செய்த டாக்ஸி

இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், சுமார் 2,73,500 வெள்ளி மதிப்பிலான சுகாதாரக் கருவிகள், சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்டுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதற்காக, எகிப்து செஞ்சிலுவைச் சங்கத்துடன் நெருக்கமாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பணியாற்றி வருகிறது. அதேபோல், ரஃபா எல்லை வழியாக காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்க இரண்டு செஞ்சிலுவைச் சங்கங்களும் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.

சாங்கியில் இருந்து முக்கிய ஐந்து நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை வழங்கும் SIA, Scoot

காஸா பகுதிகளுக்குள் நிவாரணப் பொருட்கள் எகிப்து வழியாக வந்துக் கொண்டிருந்தாலும், காஸா பகுதிக்குள் செல்லும் நிவாரணப் பொருட்களின் அளவுக் குறைவாக இருப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கவலைத் தெரிவித்துள்ளது.