சிங்கப்பூரில் COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

IMM, Clementi Mall, Tanglin Mall and four other locations visited by COVID-19 cases
IMM, Clementi Mall, Tanglin Mall and four other locations visited by COVID-19 cases (Photo: CapitaLand)

சிங்கப்பூரில் COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்கள் (ஜூன் 8) சேர்க்கப்பட்டுள்ளன.

COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்:

  • IMM
  • கிளெமென்டி மால்
  • உட்லேண்ட்ஸ் மார்ட்
  • உட்லேண்ட்ஸ் நார்த் பிளாசா
  • Yuhua Village Market மற்றும் உணவு நிலையம்
  • டாங்ளின் மால் (Tanglin Mall)
  • 82 மரைன் பரேட் சென்ட்ரலில் ஒரு வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம் (HDB) பிளாக்

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் டிக்கெட் விவரம்..!

அதே போல் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் பொது இடங்களுக்கு வருகை தந்த விவரம்:

  • மே 25 மற்றும் ஜூன் 3 ஆம் தேதி IMM
  • ஜூன் 2 அன்று கிளெமென்டி மாலில் உள்ள ஜின்ஜா சிக்கன் உணவகம் (Jinjja Chicken)
  • மே 30 அன்று உட்லேண்ட்ஸ் மார்ட் மற்றும் உட்லேண்ட்ஸ் நார்த் பிளாசாவில் உள்ள Yuhua Village Market மற்றும் உணவு நிலையம் மற்றும் ஜயண்ட் சூப்பர் மார்க்கெட்டுகள் (Giant supermarkets)
  • மே 29 அன்று 82 மரைன் பரேட் சென்ட்ரலில் உள்ள டாங்ளின் மால் மற்றும் HDB

குறிப்பிட்ட நேரத்தில், மேலே குறிப்ப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மூளைக் கட்டியால் அவதிப்படும் வெளிநாட்டு ஊழியர் – S$50K நன்கொடை வழங்குமாறு முதலாளி கோரிக்கை..!