சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்த திட்டம்..!

New dental clinic for migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்த குறுகிய காலத் திட்டங்களுடன், நீண்டகாலத் திட்டங்களையும் கொண்டிருப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம்” – பிரதமர் லீ தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!

மேலும், விடுதிகளில் தூய்மை, சுகாதாரத் தரநிலைகளை அதிகரித்தல், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் அதிகாரிகள் பணியாற்றிவருகின்றனர். மருத்துவக் குழுக்கள் அருகிலேயே பணிபுரிவதால் ஊழியர்களுக்கு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்டோர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறுவதாக திரு. ஹெங் கூறினார். நீண்டகால அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்களைப் பராமரிக்கும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

மேலும் அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து இங்கு வந்து சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு உதவுதாக திரு. ஹெங் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதிசெய்வது அவசியம். அத்துடன் சிங்கப்பூரில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வதை உறுதிப்படுத்துவதிலும் முதலாளிகள் அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: 10 சிங்கப்பூரர்களில் ஒன்பது பேருக்கு தலா $600 செலுத்தப்படும்..!