பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்!

Photo: Indigo Airlines

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களின் ஒன்றான இண்டிகோ நிறுவனத்திற்கு  சொந்தமான விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று (17/07/2022) பாகிஸ்தான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு 130 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E- 1406 விமானம் நேற்று (17/07/2022) காலை புறப்பட்டது. விமானம் பாகிஸ்தான் எல்லையை நெருங்கிய போது தொடர்ந்து பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரினர்.

சிலிண்டர் வாங்க போனவருக்கு ரூ.79 லட்சம் “ஜாக்பாட்”!

அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை அவசரமாகவும், மிக சாதுர்யமாகவும் தரையிறக்கினர் விமானிகள். அதன் தொடர்ச்சியாக, விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, விமான நிலையத்தில் இருந்த அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர், இண்டிகோ நிறுவனத்தின் மாற்று விமானம் கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று பயணிகளை ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தது.

கடந்த ஜூலை 5- ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இண்டிகேட்டர் லைட் பழுதடைந்ததால், கராச்சி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிர் ரிஸ் பார்ம்வேயில் மூடப்படும் மீன் பண்ணை… S$20,000க்கு பதில் S$2,500 – அனைத்தும் தள்ளுபடி விலையில்!

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு இந்திய விமானங்கள் பாகிஸ்தான் நாட்டில் தரையிறக்கப்பட்டிருக்கின்றன என்பது நினைவுக்கூறத்தக்கது.