சிங்கப்பூரில் இந்திய மரபுடைமை நிலையம் மீண்டும் திறப்பு..!

Indian Heritage Centre reopened
Indian Heritage Centre reopened (Photo: Root)

அதிரடி நடவடிக்கைக்கு பிறகு இரண்டாம் கட்டத் தளர்வில், சிங்கப்பூரில் இன்று மீண்டும் இந்திய மரபுடைமை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் கடைசியுடன் நிறைவடைய இருந்த “From the Coromandel Coast to the Straits” சிறப்புக் கண்காட்சி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தெம்பனீஸ் சாலையில் விபத்து – 6 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்..!

வழக்கத்தை விடக் குறைவாக, அதாவது நான்கில் ஒரு பங்கு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

இதில் SafeEntry பயன்படுத்த வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகையாளர்களிடம் வெப்பநிலைப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

5 நபர்களுக்கு மேற்பட்ட குழுக்களுக்கு அனுமதி இல்லை, மேலும் குழுக்களுக்கு இடையே 1 மீட்டர் பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்யவேண்டும்.

உடல்நிலை சரியில்லாதவர்கள் ஊழியர்களை அணுகவேண்டும்.

நேரடி வழிகாட்டிச் சுற்றுலாக்கள் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பார்வையாளர்கள் மின்னிலக்க வழிகாட்டிச் சுற்றுலாவைக் காண முடியும்.

Source : Seithi MediaCorp

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொத்தோங் பாசிர் பிளாட்டுக்குள் சடலம் ஒன்று கண்டெடுப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg