சிங்கப்பூரில் 12ஆம் தேதி திறக்கப்படும் சேவைகள் SafeEntry செயலியைப் பயன்படுத்த வேண்டும்..!

Initiatives on contact tracing to be stepped up and expanded
Initiatives on contact tracing to be stepped up and expanded (Photo: www.ndi-api.gov.sg)

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக தொடர்புத் தடமறிதல் முயற்சிகள் முடுக்கிவிடப்படுகின்றன.

சிங்கப்பூரில் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகள் வரும் வாரங்களில் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : எச்சரிக்கை பதிவு: சிங்கப்பூரில் தொலைபேசியின் மூலம் பண மோசடி..!

அதன் அடிப்படியில் வரும் மே 12 ஆம் தேதியிலிருந்து மீண்டும் திறக்கப்படும் வர்த்தகங்களும் சேவைகளும் SafeEntry செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது பெயர், தொடர்பு எண், அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் கொண்டு தொடர்பில் வந்தவர்களை அடையாளம் காணும் பணிகளுக்கு இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் அதிகம் வந்துபோகும் இடங்களான ரயில் நிலையங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் SafeEntry சோதனைச்சாவடிகள் கட்டாயமில்லாவிட்டாலும், அங்கு வைக்கப்பட்டுள்ள QR குறியீடுகளை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் முடிதிருத்தகம், வீட்டிலிருந்து இயங்கும் தொழில்கள் மற்றும் சலவை சேவைகள் போன்ற வணிகங்கள் மே 12 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பராம்பரியச் சீன மருத்துவர்கள் இம்மாதம் 5ஆம் தேதி முதல் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID -19: வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதற்கான சிங்கப்பூர் அரசின் விரிவான அணுகுமுறை..!