வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் தங்குமிடங்களில் அதிகரிக்கும் ஆய்வுகள்

migrant-domestic-workers mental-distress
(Photo: TRT World and Agencies)

சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் தங்குமிடங்களில் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சில தங்குமிடங்களில் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிங்கப்பூரில் 26வது மாடியிலிருந்து விழுந்த 2 சிறுமிகள் மரணம்

அந்த இரு வீட்டுப் பணிப்பெண்களும் ஒரே தற்காலிக தங்குமிடத்தில் தங்கியிருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்காலிக தங்குமிட ஆபரேட்டர்கள், அதிகாரிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆலோசனையைப் பெற்றுள்ளனர், அதாவது குறைந்தபட்ச அளவு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கையில் இருப்பது போன்றவை அதில் அடங்கும்.

அந்த இடங்களில் பணிப்பெண்கள் பாதுகாப்பு இடைவெளிகளை கடைபிடிக்கிறார்களா போன்றவை குறித்து கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்கள் ஒரே இடத்தில் தங்கிருப்பதால் கிருமி அதிகம் பரவும் வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

டான்ஜோங் கடற்கரையில் ஆடவரை தாக்கிய திருக்கை மீன் – பொதுமக்கள் கவனம்