புதிய வகை வேலை மோசடி… குறைந்தபட்சம் 13 பேர் பலிகடா – போலீஸ் எச்சரிக்கை

job scam $38k 13 people lost
SPF

சிங்கப்பூரில் கடந்த ஜனவரி முதல் புதிய வகை வேலை மோசடிக்கு குறைந்தபட்சம் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மொத்தம் சுமார் S$38,000 தொகையை இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை (SPF) இன்று (மார்ச் 7) தெரிவித்துள்ளது.

ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?

பயணம் தொடர்பானவற்றை ரிவீவ் செய்வதன் மூலம் கமிஷன் பெறலாம் என்ற வேலை மோசடியில் அவர்கள் சிக்கினர்.

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலி மூலம் அவர்களுக்கு வலை விரிக்கப்படுகிறது.

பயண இடங்கள் மற்றும் அதன் கட்டண பேக்கேஜ்களை ரிவீவ் செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என்று இந்த வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக மோசடி கும்பல் கூறுவார்கள்.

நம்பிக்கையை வலுப்படுத்த, முறையான பயண நிறுவனமான Anywhr க்கு ஆட்சேர்ப்பு செய்வதாக மோசடி செய்பவர்கள் ஏமாற்றுவார்கள்.

இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று SPF எச்சரித்துள்ளது.

இரத்தம் தோய்ந்த துண்டான கால் வீடியோ இணையத்தில் பரவல்… கண்டெடுக்கப்பட்ட சடலம் – என்ன நடந்தது?