ஜூரோங் புதிய தங்குவிடுதியில் மருத்துவ வசதி பற்றாக்குறை!

Photo: MOH

புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 தாெற்று பரிசோதனை, சரியான முறையில் செயல்படாததற்கு போதுமான மருத்துவ வளங்கள் இல்லாததே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் வசிக்கும் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தடுப்பூசி இன்னும் முழுமையாக போட்டுக் கொள்ளவில்லை என்று மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர்களின் பராமரிப்பு பிரிவின் தலைவரான திரு துங் யுங் ஃபாய் தெரிவித்தார்.

கோபத்தில் கணவரை கத்தியால் குத்திய மனைவிக்கு சிறைத் தண்டனை!

மேலும், நிறுவனத்தின் முதலாளி ஒருவர், துக்காங் தங்குவிடுதியில் தங்கியுள்ள தன்னுடைய ஊழியர்களின் நலன் கருதி கட்டாய கோவிட்-19 தாெற்று பரிசோதனை செய்ய முயன்ற போதுதான், அவ்விடுதியில் முறையான மருத்துவ வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார் திரு. துங்.

ஜூரோங் புதிய தங்குவிடுதியில் உள்ள ஊழியர்களில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கோவிட்-19 தாெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 தாெற்று ஏற்பட்ட ஊழியர்களை கவனிப்பது மற்றும் தனிமைப்படுத்துவதில் ஏற்பட்ட அலட்சியம் மற்றும் முறையற்ற பராமரிப்பினால், தங்குவிடுதியின் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைப் பற்றி தங்குவிடுதியின் நிர்வாகத்திடமும், ஊழியர்களிடமும் கலந்துரையாடிய பின், கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினைகள் சரிசெய்யப்படுமென திரு துங் தெரிவித்தார்.

இப்பிரச்சினைகள் பற்றி தெரிந்து இரண்டு நாட்கள் கழித்தே, மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர்களின் பராமரிப்பு பிரிவின் தலைவரான திரு துங் யுங் ஃபாய் அவர்கள் அவ்விடுதிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரை முறையாக நிறுத்தியவரை தகாத வார்த்தையில் குறிப்பிட்டு அதை காரில் வைத்து சென்ற ஆடவர் – காணொளி