‘டிக்டாக்கில் வீடியோவைப் பதிவிடுங்கள்… பரிசுகளை வெல்லுங்கள்’- ‘Lisha’ அழைப்பு!

Photo: Lisha Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரபலமான பகுதியாகவும், கடைகள் நிறைந்த பகுதிகளாகவும் உள்ளது லிட்டில் இந்தியா பகுதி. இப்பகுதியில் கடைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ‘Lisha’ (Little India Shopkeepers and Heritage Association) என்ற அமைப்பைத் தொடங்கி, சிங்கப்பூரில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் ஆடவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு

மேலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை லிட்டில் இந்தியா பகுதியில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், சாலைகள் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிப்படும். சுமார் ஒரு மாதத்திற்கு மேலே தீபாவளி பண்டிக்கைக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவையை ‘Lisha’ அமைப்பு வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. ‘Lisha’ அமைப்பு சார்பில் லிட்டில் இந்தியா சாலை முழுவதும் விதவிதமான உருவங்களில் வண்ண விளக்குகள் ஜொலிக்கிறது. இதனை, பொதுமக்கள் கண்டு ரசித்து, புகைப்படத்தையும் எடுத்துச் செல்கின்றனர். மேலும், நாள்தோறும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளிப் பண்டிகைக்கான சிறப்பு இனிப்பு, காரம் பலங்காரங்களை சமையல் கலைஞர்கள் செய்து அசத்துகின்றனர். அதேபோல், மற்றொரு புறம் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே காணும் வகையில் ‘Lisha’ சிறப்பு ஏற்பாடு!

நடப்பாண்டில் நவம்பர் 21- ஆம் தேதி வரை தீபாவளி கொண்டாடட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் விவரங்கள் குறித்த பட்டியலை ‘Lisha’, https://www.deepavalisg.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, காணும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது, அதன்படி, ‘Lisha’ வின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் ‘Youtube’- ல் நேரலையாகக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி, ‘Lisha Deepavali Tiktok Challenge’ என்ற போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் பெண்கள் நடனமாடி, அதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் ‘LISHATIKTOKCHALLENGE’ என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு வீடியோவைப் பதிவிட வேண்டும். அக்டோபர் 18- ஆம் தேதிக்கு முன்னதாக பதிவிட வேண்டும். எந்த விடீயோவிற்கு அதிக லைக் கிடைக்கிறதோ அவர்களே வெற்றியாளர் ஆவர். அவருக்கு 400 சிங்கப்பூர் டாலர் வரை மதிப்புள்ள கவர்ச்சிகரமான பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி வாயிலாக நடந்த ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அவசர கூட்டம்!

இந்த டிக்டாக் போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு என்ற deepavalisg.com/eventlist/lisha-deepavali-tik-tok-challenge என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.