சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய 12 இடங்கள் வெளியீடு..!

VivoCity, 313@somerset, Lucky Plaza and 9 other locations visited by COVID-19 cases
VivoCity, 313@somerset, Lucky Plaza and 9 other locations visited by COVID-19 cases

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக எட்டு வணிக வளாகங்கள் உட்பட மொத்தம் 12 இடங்கள் (ஜூன் 25) சேர்க்கப்பட்டுள்ளன.

பொது இடங்களின் பட்டியல்:
  • காக்கி புக்கிட் பொழுதுபோக்கு மையம் (Kaki Bukit Recreation Centre)
  • கெய்லாங் ரோட்டில் உள்ள Sheng Siong சூப்பர் மார்க்கெட்
  • Dunlop Streetல் உள்ள கடை
  • ஹார்ட்லேண்ட் மால்
  • குயின்ஸ்வே ஷாப்பிங் சென்டர் (Queensway Shopping Centre)
  • Seah Im உணவு நிலையம்
  • விவோசிட்டி
  • லக்கி பிளாசா
  • 313@சோமர்செட் (313@somerset)
  • Peninsula ஷாப்பிங் சென்டர்
  • கல்லாங் வேவ் மால் (Kallang Wave Mall)
  • Bugis Junction

இதையும் படிங்க : சிங்கப்பூர் பாசிர் ரிஸில், ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட மோசமான விபத்து..!

கெய்லாங்கில் உள்ள Sheng Siong சூப்பர் மார்க்கெட்டிற்கு நான்கு தனித்தனியான சந்தர்ப்பங்களில் தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்தனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இடங்களில் 8 இடங்கள், COVID-19 பாதித்த நபர்கள் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Source: MOH)

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கையின் போது ஒன்றுகூடிய 7 வெளிநாட்டவர்களுக்கு அபராதம்..!