சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் சமூக ஊடகங்கள் வழியாக இந்திய அரசுக்கு அழுத்தம்..!

lot of Singapore tamils give pressure to India state and central govt
lot of Singapore tamils give pressure to India state and central govt (Photo: India in Singapore/Twitter)

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், சமூக ஊடகங்களில் விமான சேவை குறித்து இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

COVID-19 கிருமித்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளையும் கடந்த மார்ச் மாதம் ரத்து செய்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 4 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டும் பணியை இந்திய அரசு தொடங்கி அதனை மேற்கொண்டும் வருகிறது. COVID-19 சூழல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு ‘வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சிங்கப்பூரிலிருந்து சிறப்பு ஏர் இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ AI381 விமானம் 234 பயணிகளுடன் கடந்த மே 8ஆம் தேதி காலை டெல்லி புறப்பட்டு சென்றது. அதே போல் மும்பை, கொச்சி மற்றும் பெங்களூருக்கும் விமானங்கள் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் விமானம் இயக்க வேண்டும் என்று சிங்கப்பூர் தமிழர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுவது போல் தமிழகத்திற்கும் வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தும் வருகிறது. விரைவில் விமான சேவை எதிர்பார்ப்பதாக தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது பற்றி High Commissioner ஜாவெத் அஷ்ரப் கூறுகையில், தொடர்ந்து தமிழகத்திற்கு விமானங்களைக் கேட்டு வருவதாகவும், ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அரசு காத்திருக்கிறது என்றும், ஜூன் முதல் வாரத்தில் அதை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகளாக மாற்றப்பட உள்ள இரண்டு முன்னாள் பள்ளி வளாகங்கள்..!