மலேசிய எல்லைகள் மீண்டும் நாளை (ஏப். 1) திறப்பு: “எதனையும் எதிர்கொள்ள தயார்”

malaysia-police-border-reopen
LTA's OneMotoring website

நாளை ஏப்., 1ம் தேதி, மலேசிய நாட்டின் எல்லைகளை மீண்டும் பாதுகாப்பாக திறப்பதை உறுதிசெய்யும் வகையில், அந்நாட்டின் போலீஸ் படை தயாராக உள்ளது.

இதனை மலேசியாவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் அக்ரில் சானி அப்துல்லா சானி நேற்று (மார்ச் 30) தெரிவித்தார்.

Breaking: வெளிநாட்டு ஊழியர்களுக்கான தளர்வுகள்: எங்கே மாஸ்க் போடணும், போடக்கூடாது, ART, குழு, மது வரம்பு உள்ளிட்ட அனைத்துக்கும் விடை – விரிவான பதிவு!

குறிப்பாக பெனிசுலார் மலேசியா மற்றும் சபா மற்றும் சரவாக்கில் வடக்கு மற்றும் தெற்கு எல்லை உள்ளிட்ட நாட்டின் எல்லைகளில் மலேசியாவின் பொது காவல் படை பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளதாக CNA தெரிவித்துள்ளது.

நாளை “ஏப். 1 அன்று நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் போது எதிர்வரும் எதனையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அக்ரில் சானி கூறினார்.

ART கருவி தேவைப்படுவோருக்கு குட் நியூஸ்: வாங்க ஆஃபர்’ல அள்ளிட்டு போங்க! – 4 நாட்களுக்கு மட்டுமே!

மேலும், மலேசியா காவல்துறை விழிப்புணர்வை முடுக்கிவிட்டுள்ளதாகவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கண்காணிப்பை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

அந்நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் இந்த முதல் வாரத்தில் சுமார் 1,600 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு – துவாஸ் கப்பல் தளத்தில் நடந்த சம்பவம்