மலேசிய முடக்கம்: சிங்கப்பூர் MRT நிலையங்களில் படுத்து உறங்கும் மலேசியர்கள்..!

Malaysia lockdown COVID-19
COVID-19: Malaysia lockdown

கடந்த மார்ச் 18 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து மலேசியர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், மலேசியா குடிமக்கள் வெளிநாட்டிற்கு செல்லவும், வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : மலேசியர்கள் வெளிநாடு செல்லத் தடை; கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடல்..!

இதன் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக ஜொகூர் பாரு – சிங்கப்பூர் பாலம், போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் தங்கி வேலை பார்க்கும் படி வழிவகுக்கப்பட்டது.

முதலாளிகள் பலர் மலேசிய தொழிலாளர்களுக்கு தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தாலும், சிலருக்கு தங்கும் வசதி இல்லாததால் MRT நிலையங்களில் படுத்து உறங்கியுள்ளனர்.

சுமார் 20 மலேசியர்கள் சிங்கப்பூர் MRT Kranji நிலையங்களில் படுத்து உறங்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Source : vanakkam malaysia

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தம்..!!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil