சிங்கப்பூர் அதிபருடன் மலேசிய பிரதமர் சந்திப்பு!

Photo: Singapore President Official Facebook Page

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் மலேசியா- சிங்கப்பூர் இடையேயான தரைவழி பேருந்து போக்குவரத்தை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Malaysian Prime Minister Ismail Sabri Yaakob) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கனரக வாகனத்தில் இருந்து பறந்த டயர் – கார் ஒன்றை தாக்கும் காணொளி!

இந்நிகழ்ச்சியானது சிங்கப்பூர்- மலேசியா எல்லையான ஜொகூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சோதனை சாவடியில் (Woodlands Check point) இன்று (29/11/2021) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு நாட்டு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணமாக சிங்கப்பூருக்கு வருகை தந்தார். அவருக்கு அரசு சார்பில் அணி வகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்து, இரு தரப்பு உறவு, பொருளாதாரம், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், வேலை வாய்ப்பு, இரு நாடுகளிடையேயான வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து மலேசிய பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை மலேசிய பிரதமர் நேரில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து சிங்கப்பூர் அதிபர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இன்று சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆகஸ்ட் 2021- ல் பிரதமராக நியமிக்கப்பட்ட இஸ்மாயில் சப்ரியினுக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். மேலும் அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்து தெரிவித்தேன்.

இன்று முதல் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான ‘VTL’ விமான சேவை!

சிங்கப்பூரும், மலேசியாவும் பல தசாப்தங்களாக நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திய ஆழமான வேரூன்றிய உறவுகளை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். எங்கள் நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியமான பகுதிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

சிங்கப்பூர்- மலேசியா வான்வழி மற்றும் தரைவழி சிறப்பு பயணக் பாதைகள் (VTLs) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டதன் மூலம், எல்லையின் இருபுறமும் உள்ள பல குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் விரைவில் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். VTL- களை நடைமுறைக்குக் கொண்டு வந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன், மேலும் நமது மலேசியா அண்டை நாடுகளுடன் விரைவில் மீண்டும் இணைவதற்கு எதிர்நோக்குகிறேன். சிங்கப்பூரும், மலேசியாவும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.