சிங்கப்பூரில் சுமார் 350,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் விநியோகம்..!

Masks, hand sanitisers to be distributed to 350,000 migrant workers in dormitories
Masks, hand sanitisers to be distributed to 350,000 migrant workers in dormitories (PHOTO: SPH)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் சுமார் 350,000 ஊழியர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று புலம்பெயர்ந்த தொழிலாளர் நிலையம் (MWC) புதன்கிழமை (ஏப்ரல் 8) தெரிவித்துள்ளது.

இதில் முதற்கட்டமாக 120,000 முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று MWC தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியான சுங்கை தெங்கா லாட்ஜ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

மேலும், “மீதமுள்ள ஊழியர்களுக்கு விநியோகத்தை விரைவாக செய்வோம்” என்றும் அது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

“Temasek அறக்கட்டளையின் ஆதரவுடன், MWC விரைவில் தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கை சுத்திகரிப்பு கிருமிநாசினிகளை விநியோகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

S11 Dormitory @ Punggol மற்றும் Westlite Toh Guan ஆகிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் சுமார் 20,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் அறைகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ விபத்து – காணொளி..!

மேலும் சுங்கை தெங்கா லாட்ஜ், Tampines Dormitory, கிராஞ்சி லாட்ஜ் ஆகிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசங்கள் மற்றும் பிற தேவைகள் வழங்குவதற்கு பதிலாக பணத்தை நன்கொடையாக கொடுத்து உதவலாம் என்றும் விருப்பமுள்ள பொதுமக்களை MWC கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் ஆன்லைனில் தங்கள் நன்கொடைகளை வழங்கலாம் – giving.sg/mwaf/migrantswecare